/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொலுசு உற்பத்தி மையம், சிப்காட்காணொலி மூலம் திறந்த முதல்வர்
/
கொலுசு உற்பத்தி மையம், சிப்காட்காணொலி மூலம் திறந்த முதல்வர்
கொலுசு உற்பத்தி மையம், சிப்காட்காணொலி மூலம் திறந்த முதல்வர்
கொலுசு உற்பத்தி மையம், சிப்காட்காணொலி மூலம் திறந்த முதல்வர்
ADDED : மார் 26, 2025 02:02 AM
கொலுசு உற்பத்தி மையம், சிப்காட்காணொலி மூலம் திறந்த முதல்வர்
சேலம்:சேலம், அரியாகவுண்டம்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட வெள்ளி கொலுசு உற்பத்தி மையம், உமையாள்புரத்தில் தொழிற்பேட்டை, சீலநாயக்கன்பட்டியில் நிறுவப்பட்ட அச்சு குழுமத்தினை, முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்து, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, அரியாகவுண்டம்பட்டியில் நடந்த விழாவில், கலெக்டர் பிருந்தாதேவி குத்து
விளக்கு ஏற்றி பார்வையிட்டார்.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், வெள்ளி கொலுசு உற்பத்தி மையம், 25.29 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. 1.209 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இம்மையத்தில், 102 அறைகள் இடம் பெற்றுள்ளன. பெ.நா.பாளையம் ஒன்றியம், உமையாள்புரத்தில், 4 கோடி ரூபாய் மதிப்பில் தொழிற்பேட்டை, சீலநாயக்கன்பட்டியில், 13.46 கோடி ரூபாய் மதிப்பில், 1.029 ஏக்கர் பரப்பில், 37 பொது சேவை மையங்கள் உள்ளடக்கிய அச்சுகுழுமத்தை முதல்வர் திறந்து வைத்தார். சேலம் ஆர்.டி.ஒ., அபிநயா, மாவட்ட தொழில்மைய மேலாளர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
******************