/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கல்லுாரி முதல்வர் வீட்டில் திருட்டு: கைதியிடம் விசாரிக்க அனுமதி
/
கல்லுாரி முதல்வர் வீட்டில் திருட்டு: கைதியிடம் விசாரிக்க அனுமதி
கல்லுாரி முதல்வர் வீட்டில் திருட்டு: கைதியிடம் விசாரிக்க அனுமதி
கல்லுாரி முதல்வர் வீட்டில் திருட்டு: கைதியிடம் விசாரிக்க அனுமதி
ADDED : மார் 28, 2025 01:34 AM
கல்லுாரி முதல்வர் வீட்டில் திருட்டு: கைதியிடம் விசாரிக்க அனுமதி
ஆத்துார்:ஆத்துார், காட்டுக்கோட் டையை சேர்ந்தவர் செல்வராஜ். ஆத்துார் அரசு கல்லுாரி முதல்வரான இவரது வீட்டில், கடந்த ஜன., 24ல், 25 பவுன் நகைகள் திருடுபோனது. ஆத்துார் ஊரக போலீசார் விசாரித்து, பிப்., 5ல், ஆத்துாரை சேர்ந்த சதாசிவம், 41, உள்பட, 3 பேரை கைது செய்தனர். மேலும், 3 பேரை தேடினர். இதில் ஒருவரான, திருச்சி, திருவெறும்பூரை சேர்ந்த தினேஷ்குமார், 32, கொலை வழக்கில் கைதாகி, திருச்சி மத்திய சிறையில் இருப்பது தெரிந்தது.
இதனால் அவரிடம் விசாரிக்க, திருச்சி மத்திய சிறையில் இருந்து அழைத்து வந்து, ஆத்துார் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் முனுசாமி, 2 நாள் விசாரிக்க அனுமதி அளித்தார்.