/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தைப்பூச திருவிழா; காளிப்பட்டியில் தயாராகும் பொழுதுபோக்கு விளையாட்டு
/
தைப்பூச திருவிழா; காளிப்பட்டியில் தயாராகும் பொழுதுபோக்கு விளையாட்டு
தைப்பூச திருவிழா; காளிப்பட்டியில் தயாராகும் பொழுதுபோக்கு விளையாட்டு
தைப்பூச திருவிழா; காளிப்பட்டியில் தயாராகும் பொழுதுபோக்கு விளையாட்டு
ADDED : ஜன 24, 2024 09:57 AM
வீரபாண்டி: காளிப்பட்டி, கந்தசாமி கோவில் தைப்பூச திருவிழாவையொட்டி, சிறுவர்களுக்கான ராட்சத ராட்டினங்கள், கேளிக்கை விளையாட்டுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள, காளிப்பட்டி கந்தசாமி கோவில் முருகனின் அறுபடை வீடுகளுக்கு, அடுத்தபடியாக அதிக பக்தர்கள் வந்து வழிபடும் முக்கிய கோவிலாக உள்ளது. தைப்பூச திருவிழா கடந்த, 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை ( ஜன.,25ல்) நடக்கவுள்ளது. 28 வரை திருவிழா நடக்கிறது. இது தவிர ஒரு மாதம் வரை தொடர்ந்து, சுற்று வட்டாரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து கொண்டிருப்பர்.
இதையொட்டி, கோவிலை சுற்றிலும் நுாற்றுக்கும் மேற்பட்ட கரும்புச்சாறு, அப்பள கடை உள்ளிட்ட தற்காலிக கடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதே போல் கோவில் எதிரில் மங்கலம் சாலையில், ராட்சத ரங்கராட்டினம், டோரா டோரா, கொலம்பஸ், குட்டி ரயில் போன்ற சிறுவர்கள் முதல் பெரியவர்களை கவரும் வகையில் கேளிக்கை பொழுதுபோக்கு விளையாட்டுகள் நடக்கவுள்ளது.
இவைகளை அமைக்கும் பணியில், ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் திருவிழாவையொட்டி, பாரம்பரியமான மாட்டு சந்தையும் நடக்கிறது.

