/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இடைத்தரகர்கள் தலையீடு தவிர்க்க கொலுசுஉற்பத்தியாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை

ADDED : மார் 26, 2025 01:36 AM
இடைத்தரகர்கள் தலையீடு தவிர்க்க கொலுசுஉற்பத்தியாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை
சேலம்:சேலம் உற்பத்தி மையத்தில், இடைத்தரகர்கள் தலையீட்டை தவிர்த்து பாரம்பரிய தொழிலாளர்களுக்கு மட்டுமே இடம் ஒதுக்கி தர வேண்டும் என, வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
தமிழகத்தில், முதல் முறையாக வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்களுக்கான மையம், 22 கோடியே 50 லட்சம் மதிப்பில் சேலம்
அரியாகவுண்டம்பட்டி பகுதியில் கட்டப்பட்டு, காணொலி மூலம் நேற்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில், நேற்று சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் சங்க தலைவர் ஸ்ரீஆனந்தராஜன் மற்றும் நிர்வாகிகள், கலெக்டர் பிருந்தா
தேவியை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாது: வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் நலன் கருதி, தனி மையம் வழங்கப்பட்டது அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிட்கோ மூலம் கட்டப்பட்டுள்ள இந்த கட்டடத்தை, வணிக வளாகம் போன்று மாத வாடகைக்கு விடக்கூடாது. இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் அங்கீகார அட்டை வைத்துள்ள, பாரம்பரிய தொழிலாளர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.