/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளி மாணவர்கள் ஓட்டிச் சென்ற பைக்குகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராத
/
பள்ளி மாணவர்கள் ஓட்டிச் சென்ற பைக்குகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராத
பள்ளி மாணவர்கள் ஓட்டிச் சென்ற பைக்குகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராத
பள்ளி மாணவர்கள் ஓட்டிச் சென்ற பைக்குகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராத
ADDED : மார் 26, 2025 01:35 AM
பள்ளி மாணவர்கள் ஓட்டிச் சென்ற பைக்குகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
கெங்கவல்லி:பள்ளி மாணவர்கள் ஓட்டிச் சென்ற, இரண்டு பைக்குகளுக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் போலீசார் அபராதம் விதித்தனர்.
கெங்கவல்லி, அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளி பகுதியில், நேற்று பிளஸ் 2 தேர்வு முடிந்து மாணவ, மாணவியர் சென்றனர். கெங்கவல்லி போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த, 17 வயது பிளஸ் 2, பிளஸ் 1 மாணவர் இருவரை அழைத்து விசாரித்தனர். அந்த வாகனத்திற்கு வாகன பதிவு சான்று, இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை. இரு பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். அவர்களது பெற்றோர்களை வரவழைத்து, மாணவர்களிடம் பைக் கொடுக்கக் கூடாது என, எச்சரித்தனர். இரண்டு பைக்குகளுக்கு, ஆவணங்கள் இல்லாததால் போலீசார் தலா, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.