/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ராசிபுரம் எஸ்.ஐ.,க்குமத்திய அரசு பதக்கம்
/
ராசிபுரம் எஸ்.ஐ.,க்குமத்திய அரசு பதக்கம்
ADDED : மார் 25, 2025 01:12 AM
ராசிபுரம் எஸ்.ஐ.,க்குமத்திய அரசு பதக்கம்
ராசிபுரம்:ராசிபுரம் போலீஸ் எஸ்.ஐ., சார்லஸ், 53; இவர், நாமக்கல் குற்றப்புலனாய்வு தனிப்பிரிவில் பணியாற்றி வருகிறார். குற்றப்புலனாய்வு துறையில் எந்தவித குற்றச்சம்பவங்களிலும் ஈடுபடாமல் பணியாற்றி வரும் போலீசாருக்கு, மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், 'உத்கிரஷ்ட் சேவா' பதக்கம் வழங்கி வருகிறது.
அதன்படி, சேலம் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் குற்றப்புலனாய்வுத்துறை தனிப்பிரிவில் உள்ள போலீசார் எவ்வித குற்றச்சம்பவங்களிலும் ஈடுபடாமல் மற்றும் நல்லடக்கத்துடன் பணியாற்றி வரும், ஆறு எஸ்.ஐ.,க்கள் இந்த பதக்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில், ராசிபுரத்தை சேர்ந்த எஸ்.ஐ., சார்லசும் தேர்வாகியுள்ளார்.
இதேபோல், நாமக்கல்லை சேர்ந்த நாகராஜன், சுந்தர்ராஜன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசால் வழங்கப்பட்ட விருதை சேலம் சரக தனிப்பிரிவு குற்ற புலனாய்வுத்துறை டி.எஸ்.பி., பூபதி ராஜன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.