ADDED : மார் 25, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா
மோகனுார்:மோகனுார், கே.புதுப்பாளையம் வள்ளியப்பம்பட்டிபுதுார் பஞ்., நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் தலைமை வகித்தார். உதவியாசிரியர் கலையரசி வரவேற்றார்.
பள்ளி மேலாண் குழு தலைவர் சினேகா, வட்டார வளமைய ஆசிரியை பயிற்றுனர் ராதிகா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் காளியண்ணன், வக்கீல் நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர் குப்புராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.