/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வழிப்பறியில் ஈடுபட்டவர்ராமநாதபுரத்தில் கைது
/
வழிப்பறியில் ஈடுபட்டவர்ராமநாதபுரத்தில் கைது
ADDED : மார் 28, 2025 01:36 AM
வழிப்பறியில் ஈடுபட்டவர்ராமநாதபுரத்தில் கைது
காரிப்பட்டி:கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் மணிகண்டன், 45. இவர், 2024 நவ., 20ல், சென்னையில் இருந்து கோவை நோக்கி, 'கெமிக்கல் லோடு' ஏற்றிச்சென்று கொண்டிருந்தார். சேலம் மாவட்டம் வாழப்பாடி, பத்தாங்கல்மேடு அருகே லாரியை நிறுத்தி இறங்கியபோது, பைக்கில் வந்த, 3 பேர், கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த 1,500 ரூபாய், ஏ.டி.எம்., கார்டு, மொபைல் போனை பறித்துச்சென்றனர். இதுகுறித்து மணிகண்டன் புகார்படி காரிப்பட்டி போலீசார் விசாரித்ததில், ராமநாதபுரத்தை சேர்ந்த தாஜ்குமார், 24, உள்பட, 3 பேர் என தெரிந்தது. நேற்று ராமநாதபுரத்தில் இருந்த தாஜ்குமாரை, காரிப்பட்டி போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடுகின்றனர்.