/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொழிலாளி வீட்டில் புதைத்து வைத்த 176 கிராம் தங்க பிஸ்கட் பறிமுதல்
/
தொழிலாளி வீட்டில் புதைத்து வைத்த 176 கிராம் தங்க பிஸ்கட் பறிமுதல்
தொழிலாளி வீட்டில் புதைத்து வைத்த 176 கிராம் தங்க பிஸ்கட் பறிமுதல்
தொழிலாளி வீட்டில் புதைத்து வைத்த 176 கிராம் தங்க பிஸ்கட் பறிமுதல்
ADDED : ஜன 21, 2024 12:07 PM
அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கைகனுாரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகன், 59; இவரது மனைவி கவுரி, 50; இருவரும், அரக்கோணம் மசூதி தெருவிலுள்ள நகை கடைகள் பகுதியிலுள்ள கழிவுநீர் கால்வாய் மண்ணை சலித்து, அதிலுள்ள தங்கம் மற்றும் வெள்ளி துகள்களை சேகரித்து, பிழைப்பு நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன், வீட்டை புதுப்பித்து, 'டிவி' பிரிட்ஜ், பேன் உள்ளிட்ட பொருட்களை முருகன் புதிதாக வாங்கினார். இவருக்கு, பணம் எப்படி வந்தது என, அப்பகுதியினர் சந்தேகமடைந்தனர். மேலும், அவரது வீட்டின் பின்புறம், தங்க பிஸ்கட் மற்றும் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் பரவியது.
இதனால், பஞ்., தலைவி உமாமகேஸ்வரி புகார்படி, நேற்று முன்தினம் இரவு, அரக்கோணம் டவுன் போலீசார், ஏ.எஸ்.பி., யாதவ் கிரீஷ் அசோக், ஆர்.ஐ., ஜெயந்தி, வி.ஏ.ஓ., புவனேஸ்வரி, உள்ளிட்டோர், முருகன் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, 176 கிராம் தங்க பிஸ்கட், மற்றும் 1.10 லட்சம் ரூபாய், வெள்ளி கொலுசு ஒன்று ஆகியவை ஒரு பிளாஸ்டிக் கவரில் புதைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
முருகனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கழிவுநீர் கால்வாயில் தங்கம் மற்றும் வெள்ளி துகள்களை சேகரிக்கும்போது, ஒரு தங்க பிஸ்கட் கிடைத்தது என்பதும், அதில் சிறு சிறு பகுதியாக வெட்டி எடுத்து, அரக்கோணம், திருத்தணி, சோளிங்கர் உள்ளிட்ட பகுதி நகைக்கடைகளில் விற்று பணமாக்கி, அதன் மூலம், வீட்டை புதுப்பித்தது உள்ளிட்ட பணிகள் செய்ததாக கூறினார். மேலும், அவர் விற்பனை செய்த நகை எவ்வளவு, உண்மையில் கழிவுநீர் கால்வாயில் கிடைத்ததா அல்லது திருடப்பட்ட தங்க பிஸ்கட்டா என, பல்வேறு கோணங்களில், அரக்கோணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

