/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பஸ்சில் மொபைல் திருடிய 2 பேர் கைது
/
பஸ்சில் மொபைல் திருடிய 2 பேர் கைது
ADDED : ஜூன் 21, 2025 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், வலசையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வஜ்ரவேல், 45. நேற்று முன்தினம், சேலம், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து புது பஸ் ஸ்டாண்டுக்கு, டவுன் பஸ்சில் பயணித்தார். அப்போது பஸ்சில், 2 பேர், வஜ்ரவேல் சட்டை பாக்கெட்டில் இருந்து, மொபைல் போனை திருடினர்.
இதை பார்த்த வஜ்ரவேல், சக பயணியர் உதவியுடன், 2 பேரையும் பிடித்து, பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், நரசோதிப்பட்டியை சேர்ந்த சக்கரவர்த்தி, 22, குரங்குச்சாவடி சவுந்திரபாண்டியன், 21, என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், மொபைல் போனை மீட்டனர்.

