/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
றையில் ப பதுக்கிய பிளாஸ்டிக் பொருட்கள் 4 டன் பறிமுதல்; ரூ.1 லட்சம் அபராதம்
/
றையில் ப பதுக்கிய பிளாஸ்டிக் பொருட்கள் 4 டன் பறிமுதல்; ரூ.1 லட்சம் அபராதம்
றையில் ப பதுக்கிய பிளாஸ்டிக் பொருட்கள் 4 டன் பறிமுதல்; ரூ.1 லட்சம் அபராதம்
றையில் ப பதுக்கிய பிளாஸ்டிக் பொருட்கள் 4 டன் பறிமுதல்; ரூ.1 லட்சம் அபராதம்
ADDED : ஜூன் 15, 2025 02:23 AM
ஓசூர், ஓசூரில், கடை ஒன்றில் ரகசிய அறையில் பதுக்கி வைத்திருந்த, 4 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் சமீபத்தில் நடந்த பொது சுகாதார குழு கூட்டம் மற்றும் கவுன்சிலர்கள் கூட்டத்தில் பேசிய, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் மற்றும் கவுன்சிலர்கள், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து விட்டதாக குற்றம்சாட்டினர்.
அதனால், மாநகர நல அலுவலர் அஜிதா மற்றும் ஊழியர்கள், நாமல்பேட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவில் தெருவில் உள்ள கடைகளில், சோதனை நடத்துவதற்காக நேற்று காலை சென்றனர். அப்போது, ஒரு கடையில் சோதனைக்காக உள்ளே சென்ற போது, திடீரென ஒரு அறைக்குள் இருந்து ஒருவர் வெளியே வந்தார்.
அப்போது தான், கடைக்குள் ரகசிய அறை இருப்பது மாநகராட்சி ஊழியர்களுக்கு தெரியவந்தது. உடனடியாக அறைக்குள் சென்று சோதனை செய்தபோது, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்கள், சாப்பாட்டு, ஸ்நாக்ஸ் தட்டுகள், டீ கப்புகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்ட, 4 டன் அளவிலான பல்வேறு வகையான பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடை உரிமையாளருக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதுபோன்ற சோதனை தொடரும் என, மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.