ADDED : மார் 27, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டதாரியிடம்ரூ.5 லட்சம் மோசடி
சேலம்:தலைவாசல், தேவியாக்குறிச்சியை சேர்ந்தவர் முத்து பரத். 26. பொறியியல் பட்டதாரி. இவருக்கு 'இன்ஸ்டாகிராம்' மூலம் ஒருவர் தொடர்பு கொண்டு, ஆன்லைன் வர்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். அதை நம்பிய முத்து பரத், 5,000 ரூபாய் முதலீடு செய்ய, அவருக்கு லாபம் கிடைத்தது.
தொடர்ந்து 'வாட்ஸாப்' மூலம் வேறு ஒருவர் தொடர்பு கொண்டு, 'அதிக பணம் மூதலீடு செய்தால், இன்னும் அதிக பணம் கிடைக்கும்' என கூற, அதை நம்பி, 5.16 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். பின் பணம் வரவில்லை. மர்ம நபர் பேசிய எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், நேற்று அளித்த புகார்படி, சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.