ADDED : ஜூன் 22, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம், தாரமங்கலம், தெசவிளக்கு, சின்னப்பிள்ளையூரை சேர்ந்தவர் சின்னப்பிள்ளை, 74. விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவரது கணவர் இறந்த நிலையில், மகன் ராமகவுண்டர் வீடு அருகே, தனியே வசித்தார்.
நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்நிலையில் கட்டிலில் பேச்சு மூச்சின்றி கிடந்ததால், மருத்துவரை அழைத்து வந்து பார்த்தபோது, அவர் இறந்துவிட்டது தெரிந்தது. வயது முதிர்வால் இறந்தாரா, வேறு காரணமா என, தாரமங்கலம் போலீசார்
விசாரிக்கின்றனர்.