/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இல்லம் வந்த பால ராமரால் உள்ளம் உருகியதே...
/
இல்லம் வந்த பால ராமரால் உள்ளம் உருகியதே...
ADDED : ஜன 23, 2024 09:49 AM
சேலம்: அயோத்தி ராமர் கோவில் கும்பாபி ேஷகத்தை முன்னிட்டு, நேற்று சேலம் செவ்வாய்ப்பேட்டை ருக்மணி சமேத பாண்டு ரெங்கநாதர் தேவஸ்தானத்தில் அபி ேஷகம், ராமர் பஜனை நடந்தது. மாலையில் சுவாமி திருவீதி உலா, இரவில் சிறப்பு பூஜை நடந்தது.
* மரவனேரி, மாதவத்தில் உள்ள வெற்றி விநாயகர் கோவிலில் சிறப்பு அபி ேஷக ஆராதனையை தொடர்ந்து, 108 முறை விஜய மஹா மந்திர ஜபம், ராமர் கோவில் கும்பாபி ேஷக நேரடி ஒளிபரப்பு நடந்தது.
* சிவதாபுரம், மலங்காட்டான் தெருவில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில் அம்மனுக்கு அபிேஷகம் நடந்தது. 108 முறை ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம மகா மந்திரம் ஜெபிக்கப்பட்டது.
* கொண்டலாம்பட்டி அருகே உள்ள ரங்காபுரம் பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. பா.ஜ., மாநில துணைத் தலைவர் ராமலிங்கம், சேலம் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, நெசவாளர் பிரிவு மாநில தலைவர் வெங்கடாஜலம், கல்வியாளர் பிரிவு செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.
* சேலம், பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில் தேவஸ்தானம் சார்பில் அமைக்கப்பட்ட விழா பந்தலில், பிரசன்ன வரதராஜ பெருமாள், சவுந்தர்ராஜ பெருமாள், ராமர் ஆஞ்சநேயர், ராமானுஜ மணிமண்டப பெருமாள், கிருஷ்ணா நகர் ஸ்ரீராமர், அசோக்நகர் லட்சுமி வெங்கடேச பெருமாள் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
* சேலம், ராமகிருஷ்ணா மிஷன் ஆஸ்ரமத்தில், நாம ஜபம், உலகம் போற்றும் ஸ்ரீராமர் என்னும் தலைப்பில் சந்திரசேகர் பேசினார்.
சேலம், பட்டைக்கோவில் முராரி வரதய்யர் தெருவில் அமைக்கப்பட்டு இருந்த அலங்கார பந்தலில், கோபூஜை, ஸ்ரீராம வழிபாடு, பஜனை, பக்தி பாடல்கள், சகஸ்ர நாம பாராயணம், 108 முறை ராம ஜெபம் ஆகியவற்றில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சேலத்தில் வீடுகள், தெருக்களில் ராமர் படத்தை வைத்து பூஜை செய்தும், மாலையில் தீபம் ஏற்றியும் வழிபட்டனர்.
* சேலம் பட்டைக்கோவில் ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை நண்பர்கள் குழு சார்பில் பட்டைக்கோவில் வசந்த மண்டபத்தில் பிரம்மாண்ட திரையில் பிரதிஷ்டை விழா நேரலையாக ஒளிபரப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு சேலத்தில் உள்ள பட்டைக்கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள், அசோக் நகர் லட்சுமி வெங்கடேச பெருமாள், பொன்னம்மாபேட்டை ஆஞ்சநேயர் கோவில், கிருஷ்ணா நகர் சீதா ராமச்சந்திர மூர்த்தி பெருமாள், எருமாபாளையம் ஸ்ரீ ராமானுஜர் மணிமண்டபம் மற்றும் பட்டைக்கோவில் கிருஷ்ணன் கோவில் ஆகிய ஏழு கோவில்களில் இருந்து பெருமாள்கள் வசந்த மண்டபத்தில் ஒரே இடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம்
அளித்தனர்.
* சேலம் சவுராஷ்டிரா சமூக முன்னேற்ற அறக்கட்டளை சார்பில், அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவையொட்டி, சேலம் பட்டைக்கோவில் அருகே முராரி வரதைய்யர் தெருவில் பந்தல் அமைத்து, பிரதிஷ்டை விழாவை நேரடியாக ஒளிபரப்பினர்.
* ஆத்துார் வெள்ளை விநாயகர் கோவிலில், ராமஜென்மபூமி தீர்த்த சேஸ்திர டிரஸ்ட் சார்பில், உலக நன்மை வேண்டி, ஸ்ரீராம சிறப்பு பிரார்த்தனை நடந்தது. வெள்ளை விநாயகர் கோவிலில் இருந்து, ராணிப்பேட்டை வழியாக, கடைவீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் வரை, ராமர் சிலை அலங்காரம் செய்து ஊர்வலம் சென்றனர்.
* ஆத்துார், பூங்கோலர் தெருவில் உள்ள ஸ்ரீசீதாராமர் பஜனை மடாலயத்தில், ஜெய்ஸ்ரீராம் மற்றும் பஜனை பாடல்களை பாடி, ராமரை வழிபாடு செய்தனர்.
* ஆத்துார், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் உள்ள ராமர் சன்னதியில், ராமர், சீதாதேவி, லட்சுமணன் சிலைகளுக்கு அபி ேஷக பூஜை செய்து, தீபாராதனை செய்தனர்.
ஆத்துாரில் 5 முக தீபம் ஏற்றிய மக்கள்
ஆத்துார் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில், ஸ்ரீராம நாம ஜெப வேள்வி மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. மாலை, 6:00 மணியளவில் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆத்துார், நரசிங்கபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், வீடுகளின் முன், ஐந்து தீப விளக்குகள் ஏற்றி வைத்து வழிபாடு செய்தனர்.

