/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மர்மவிலங்கு நடமாட்டம் கண்காணிக்க கேமரா
/
மர்மவிலங்கு நடமாட்டம் கண்காணிக்க கேமரா
ADDED : ஜன 23, 2024 09:59 AM
மேட்டூர்: கிராமத்தில் புகுந்து ஆடுகள், நாய்களை வேட்டையாடும் மர்ம விலங்கை பிடிக்க வனத்துறை சார்பில், மூன்று இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், சாம்பள்ளி ஊராட்சி, பாலமலை அடிவாரம் கோம்பைகாடு கிராமத்தில், மலைவாழ் மக்கள், 50க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசிக்கின்றனர். கடந்த ஒரு மாதமாக அப்பகுதியில் நடமாடும் மர்மவிலங்கு, பட்டியில் புகுந்து ஆடுகள், வீட்டில் வளக்கும் நாய்களை வேட்டையாடி கொன்று விட்டு வனப்பகுதியில் புகுந்து விடுகிறது. அந்த விலங்கு சிறுத்தையாக இருக்கலாம் என கிராம மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில், கடந்த, 20ல் விவசாயி குழந்தைசாமியின் நாயை மர்மவிலங்கு கொன்றது. சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் பழனிசாமி, செல்லப்பன், ஆறுமுகம் ஆகியோரது, 10க்கும் மேற்பட்ட ஆடுகளை மர்மவிலங்கு கொன்றுள்ளது.
இது குறித்து, மேட்டூர் வனச்சரகர் (பொறுப்பு) சுரேஷ்குமார் கூறுகையில்,'' மர்ம விலங்கு நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக பாலமலை அடிவாரத்தில் கடந்த, 21ல் மூன்று இடங்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதுவரை அதில் விலங்குகள் நடமாட்டம் எதுவும் பதிவாகவில்லை. மர்மவிலங்கு கேமராவில் சிக்கும் பட்சத்தில், அதை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

