/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அன்னதானம் வழங்கி பிரதமர் பிறந்தநாள் கொண்டாட்டம்
/
அன்னதானம் வழங்கி பிரதமர் பிறந்தநாள் கொண்டாட்டம்
ADDED : செப் 18, 2025 02:25 AM
ஆத்துார், பிரதமர் மோடியின், 75வது பிறந்தநாளை ஒட்டி, ஆத்துார் நகர பா.ஜ., சார்பில், வெள்ளப்பிள்ளையார் கோவிலில், சிறப்பு பூஜை நேற்று நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள், மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆத்துார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கு பேனா, பென்சில் வழங்கப்பட்டன. மாவட்ட முன்னாள் தலைவர் ஜெயஆனந்த், நகர முன்னாள் தலைவர் சபரிராஜா, ஆத்துார் நகர தலைவர் சண்முகசுந்தரம், செயலர் கண்ணன், பொருளாளர் பூமாலை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சேலம் மேற்கு மாவட்டம் சார்பில், தலைவர் ஹரிராமன் தலைமையில், மேச்சேரியில், 75 கிலோவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மாவட்ட இளைஞர் அணி தலைவர் பரத், நெசவாளர் பிரிவு மாநில தலைவர் அண்ணாதுரை, மாநில இளைஞரணி செயலர் ஸ்ரீபதி, மாவட்ட பொதுச்செயலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
பின் தனியார் மண்டபத்தில் பா.ஜ., நிர்வாகிகள், 75 பேர் ரத்ததானம் செய்தனர்.
பனமரத்துப்பட்டியில் கிழக்கு ஒன்றிய தலைவர் நிர்மலா தலைமையில் கட்சியினர், விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியருக்கு, நோட்டு, பேனா வழங்கும் பணியை, மாவட்ட தலைவர் சண்முகநாதன், பொதுச்செயலர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தனர். ஒன்றிய துணை தலைவர் கோபிகண்ணன், இலவசமாக செடிகள் வழங்கினார்.
ஓமலுாரில், சேலம் மேற்கு மாவட்ட செயலர் கிருஷ்ணதேவராஜ் தலைமையில் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஒன்றிய தலைவர்கள் சுரேந்தர், சேதுபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஏற்காட்டில் ஒன்றிய தலைவர் சிவகுமார் தலைமையில், எஸ்.சி., அணி மாநில முன்னாள் துணைத்தலைவர் மதியழகன் முன்னிலையில், பிரதமர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு, தட்டு, டம்ளர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர். செங்காடு ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், பேனா உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
இளம்பிள்ளை டவுன் பஞ்சாயத்து நிர்வாகிகள் சார்பில், அங்கள்ள சவுண்டம்மன் கோவில் அருகே உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

