/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டிசம்பர் சம்பளம் வழங்கப்படவில்லை: மாநகராட்சி பணியாளர்கள் ஏமாற்றம்
/
டிசம்பர் சம்பளம் வழங்கப்படவில்லை: மாநகராட்சி பணியாளர்கள் ஏமாற்றம்
டிசம்பர் சம்பளம் வழங்கப்படவில்லை: மாநகராட்சி பணியாளர்கள் ஏமாற்றம்
டிசம்பர் சம்பளம் வழங்கப்படவில்லை: மாநகராட்சி பணியாளர்கள் ஏமாற்றம்
ADDED : ஜன 14, 2024 11:24 AM
சேலம்: டிசம்பர் சம்பளம் வழங்கப்படாததால் சேலம் மாநகராட்சி பணியாளர்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சேலம் மாநகராட்சியில் துாய்மை பணியாளர்கள், செயல்திறன், செயல் திறனற்ற, சுகாதார பணியாளர்கள் என அனைவருக்கும் மாத சம்பளம் வழங்க, 35 கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது.
மாநகராட்சியில் சில ஆண்டுகளாக நிதிப்பற்றாக்குறை நிலவுகிறது. 'சீர்மிகு நகரம்' உள்ளிட்ட திட்டப்பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. பொது நிதி இருப்பு இல்லாத நிலையில் மாதந்தோறும் சம்பளம் கொடுப்பதே திண்டாட்டமாக உள்ளது. இந்நிலையில் கடந்த நவம்பர், டிசம்பர் சம்பளம், மாநகராட்சி பணியாளர்களுக்கு வழங்கப்படாமல் இருந்தது. பொங்கல் பண்டிகை நெருங்கிய நிலையில் நிலுவை சம்பளம் வழங்கப்படும் என எதிர்பார்த்தனர். ஆனால், நவம்பர் சம்பளம் மட்டும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் சம்பளத்துக்கு நிதியில்லை என கை விரிக்கப்பட்டதால், மாநகராட்சி பணியாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'மாதம் ஒருமுறை கூட்டத்தில் பங்கேற்கும் கவுன்சிலர்களுக்கு உடனே, 10,000 ரூபாய் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. சம்பளத்தை நம்பி வாழ்க்கை நடத்தும் எங்களுக்கு அதை கூட முறையாக வழங்குவதில்லை. வீட்டு வாடகை கூட தர முடியாமல் கஷ்டப்படுகிறோம்' என்றனர்.

