/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜல்லி விலை உயர்வு 27ல் ஆர்ப்பாட்டம்
/
ஜல்லி விலை உயர்வு 27ல் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 25, 2024 03:56 AM
சேலம்: சேலம், மாமாங்கத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு, பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு, அகில இந்திய கட்டுமான சங்க ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு மாநில தலைவர் திருசங்கு நிருபர்களிடம் கூறுகையில், ''ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் விலை ஒரே ஆண்டில், 100 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து தொழில் முடங்கும் சூழல் உள்ளது. இதை கண்டித்து மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தப்பட உள்ளது. வரும், 27ல் ஆர்ப்பாட்டம் செய்து, கலெக்டரிடம் மனு வழங்கப்படும். 28, 29ல் வேலை நிறுத்தம் செய்யப்படும். அதனால் முதல்வர், துறை அமைச்சர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

