ADDED : ஜூன் 15, 2025 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி, சங்ககிரி போலீசார், கடந்த, 6ல் சந்தைப்பேட்டையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மக்கள், 'சிறுவர்களுக்கு போதை மாத்திரை விற்கப்பட்டுள்ளது' என, தெரிவித்தனர். தொடர்ந்து விசாரித்த போலீசார், சந்தைப்பேட்டை, கோட்டைக்காட்டை சேர்ந்த சபரீசனை கைது செய்து, இருசக்கர வாகனம், 100 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
அதே வழக்கில், சங்ககிரி புது இடைப்பாடி சாலை, வாணியர் காலனியை சேர்ந்த, சிவக்குமார், 28, என்பவர் தலைமறைவாக, அவரை தேடி வந்தனர். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் தனிப்படை போலீசார், நேற்று, வாணியர் காலனியில் சிவக்குமாரை கைது செய்தனர்.