/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்ஜினியரிடம் 'ஜிபே' மூலம் பணம் பறிப்பு
/
இன்ஜினியரிடம் 'ஜிபே' மூலம் பணம் பறிப்பு
ADDED : பிப் 02, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே சிங்களாந்தபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக், 38, சென்னை ஐ.டி., நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறார். சொந்த ஊர் வந்த இவர், சென்னை செல்ல, இரவு 9:30 மணிக்கு சேலம் புது பஸ் ஸ்டாண்ட் வந்தார்.
அப்போது, அங்கு நின்றிருந்த மூன்று திருநங்கையர், கார்த்திக்கிடம் பேசி, அவர்கள் அறைக்கு அழைத்து சென்றனர். பின், அவரை மிரட்டி, 'ஜிபே' வாயிலாக, 50,000 ரூபாயை பறித்தனர்.
கார்த்திக் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரித்து, திருநங்கையர் மியா, 23, ரஷ்னா, 25, அம்மு, 19, ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

