/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலீஸ் ஸ்டேஷன் முன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவசாயி கைது
/
போலீஸ் ஸ்டேஷன் முன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவசாயி கைது
போலீஸ் ஸ்டேஷன் முன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவசாயி கைது
போலீஸ் ஸ்டேஷன் முன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவசாயி கைது
ADDED : ஜூன் 24, 2025 01:17 AM
கெங்கவல்லி,கெங்கவல்லியில், போலீஸ் ஸ்டேஷன் முன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
கெங்கவல்லி அருகே, 74.கிருஷ்ணாபுரம், அண்ணா நகரை சேர்ந்த, அய்யாக்கண்ணு மகன் ரவிக்குமார், 36. இவர் தோட்டத்தின் வழியாக செல்லும் பொதுப்பாதையை, 15 பேர் பயன்படுத்தி வந்தனர். ரவிக்குமார், குழாய் பதிக்கும் பணிகளுக்கு, மற்ற நபர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. தனது பிரச்னையை சரி செய்து தரவில்லை என கூறி நேற்று காலை, 11:30 மணியளவில் ரவிக்குமார், அவரது தந்தை அய்யாக்கண்ணுவுடன், கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷன் சென்றார்.
அப்போது, ஐந்து லிட்டர் டீசலை, தங்களது உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். அதையறிந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, உடலில் தண்ணீரை ஊற்றி மீட்டனர். தற்கொலைக்கு முயன்றதாக அய்யாக்கண்ணு, 70, மகன் ரவிக்குமார், 36, ஆகியோர் மீது, கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், ரவிக்குமாரை கைது செய்தனர்.