/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விளைநிலம் ஆக்கிரமிப்பு? பள்ளி ஆசிரியர் மீது புகார்
/
விளைநிலம் ஆக்கிரமிப்பு? பள்ளி ஆசிரியர் மீது புகார்
விளைநிலம் ஆக்கிரமிப்பு? பள்ளி ஆசிரியர் மீது புகார்
விளைநிலம் ஆக்கிரமிப்பு? பள்ளி ஆசிரியர் மீது புகார்
ADDED : ஜன 23, 2024 09:50 AM
சேலம்: சேலம், ஓமலுார் அடுத்த ஊ.மாரமங்கலத்தை சேர்ந்த விவசாயி பெருமாள், 58. இவர், இரு மகன்களுடன் வந்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த பின் கூறியதாவது:
எங்களுக்கு சொந்தமான, 3.25 ஏக்கர் நிலத்தில், கிணறுடன் கூடிய அரை சென்ட் நிலத்தை, சின்னு என்பவருக்கு விற்பனை செய்து விட்டோம். ஆனால் அவர், மொத்த நிலத்தையும் விற்பனை செய்தது போல, போலி பத்திரம் தயாரித்து அதை தன் மகனான அரசுப்பள்ளி ஆசிரியர் ராஜமாணிக்கம், 45, என்பவருக்கு தானசெட்டில் மென்ட் செய்து விட்டார். இது தொடர்பான வழக்கு ஓமலுார் நீதிமன்றத்தில் உள்ளது.
இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு எங்களை ஆஜராக விடாமல் தடுத்து, ராஜமாணிக்கம், அவரது மனைவி ஜெயா ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்த விவாரத்தில் எங்களை தாக்க முயன்றது தொடர்பாக, தொளசம்பட்டி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆசிரியர் தம்பதிக்கு ஆதரவாக போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர். இது தொடர்பாக, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உதவிட வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

