/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
2ம் நாளாக பொங்கிய நுரை புதுப்பாளையம் மக்கள் அவதி
/
2ம் நாளாக பொங்கிய நுரை புதுப்பாளையம் மக்கள் அவதி
ADDED : ஜன 19, 2024 10:18 AM
வீரபாண்டி: சேலம் மாவட்டம் இனாம் பைரோஜி ஊராட்சி புதுப்பாளையம், நாமக்கல் மாவட்டம் மின்னக்கல் இடையே திருமணிமுத்தாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்படும். ஆனால், 10 நாட்களாக மழையின்றி நீர்வரத்து குறைந்த நிலையில் அதிகளவில் ரசாயன கழிவு கலக்கப்படுவதால் புதுப்பாளையம் ஏரியில் இருந்து, ஆற்றுக்கு செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் நுரை பொங்கி வழிந்து நேற்று முன்தினம் தரைப்பாலம் மூழ்கியது.
இரண்டாம் நாளாக நேற்றும், கால்வாயில் இருந்து பொங்கிய நுரை தரைப்பாலத்துக்கு முன் சாலையை மறைத்தது. மக்கள் தென்னை மட்டைகளால் நுரையை அடித்து அகற்றி வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தினர். இருந்தும் தொடர்ந்து பொங்கிய நுரை ஆளுயரத்துக்கு மேல் படர்ந்து பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மீது பட்டது. அதனால் மாவட்ட சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள், திருமணிமுத்தாறு, புதுப்பாளையம் ஏரி, உபரிநீர் கால்வாய்களில் ஆய்வு செய்து ரசாயன கழிவு கலப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

