/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சர்வதேச எறிபந்தில் இந்தியா முதலிடம்: சேலத்தை சேர்ந்த விவசாயி மகள் அசத்தல்
/
சர்வதேச எறிபந்தில் இந்தியா முதலிடம்: சேலத்தை சேர்ந்த விவசாயி மகள் அசத்தல்
சர்வதேச எறிபந்தில் இந்தியா முதலிடம்: சேலத்தை சேர்ந்த விவசாயி மகள் அசத்தல்
சர்வதேச எறிபந்தில் இந்தியா முதலிடம்: சேலத்தை சேர்ந்த விவசாயி மகள் அசத்தல்
ADDED : ஜன 14, 2024 10:40 AM
வீரபாண்டி: சர்வதேச எறிபந்து போட்டியில் இந்தியா முதலிடம் பிடித்த நிலையில் அதில் இடம்பெற்ற சேலத்தை சேர்ந்த விவசாயி மகள், சிறந்த வீராங்கனையாக தேர்வாகி தங்கம் வென்றார்.நேபாள நாட்டு இளைஞர், விளையாட்டு ஆணையம், இந்திய இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு சங்கம் இணைந்து, நேபாளத்தில் கடந்த ஜன., 4 முதல், 8 வரை சர்வதேச பெண்கள் எறிபந்து போட்டியை நடத்தின.
அதில் இந்திய அணி சார்பில் தேர்வான, 13 வீராங்கனையரில், சேலம், ஈரோடு மாவட்டங்களில் இருந்து, 4 பேர் பங்கேற்றனர். இந்த அணி முதலிடம் பிடித்தது.இதில் இடம்பெற்ற, சேலம், சிவதாபுரம் அருகே பெருமாம்பட்டி, கணவாய்காட்டை சேர்ந்த விவசாயி மாதேஸ்வரனின் மகள் ஹேமாவதி, நேற்று முன்தினம் சொந்த ஊர் திரும்பினார். அவர், அந்த தொடரில் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டு தங்கம் பெற்றார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:ஈரோட்டை சேர்ந்த அர்ச்சனா, ஸ்ரீமதி, சேலம், பெருமாம்பட்டி விவசாயி மணிகண்டனின் மகள் அகல்யா, 20, ஆகியோருடன், என்னையும் சேர்த்து, 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 13 பேர் அடங்கிய அணிக்கு அர்ச்சனா கேப்டனாக உள்ளார். 19 வயதுக்குட்பட்டோர் சர்வதேச எறிபந்து போட்டி நேபாளத்தில் நடந்தது. 25 நாடுகள் பங்கேற்ற நிலையில் இறுதிப்போட்டியில் இலங்கையை எதிர்கொண்டோம். அதில், 25 - 15 என்ற புள்ளி கணக்கில் இலங்கையை வீழ்த்தி முதலிடம் பிடித்தோம். இதில் சிறந்த வீராங்கனையாக தேர்வானது மகிழ்ச்சி.இவ்வாறு அவர் கூறினார்.

