/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அனல்மின் நிலையம் அருகே பாலத்தில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் புதுப்பிப்பு

ADDED : ஜூன் 25, 2025 01:51 AM
மேட்டூர், மேட்டூர், தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் இருந்து தினமும், 2.40 கோடி லிட்டர் தண்ணீர் எடுத்து சுத்திகரித்து, ஓமலுார், காடையாம்பட்டி தாலுகா மற்றும் வழியில் உள்ள டவுன் பஞ்சாயத்து பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. இதில் காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் அமைத்து, 25 ஆண்டுக்கு மேலானதால், ஆங்காங்கே உடைந்து குடிநீர் வீணானது.
இதனால் புதிதாக குழாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று இறுதியாக, அனல்மின் நிலையம் அருகே உள்ள காவிரி பாலத்தில், 210 மீ., நீள குழாய்களை அகற்றி, புது குழாய் பொருத்தும் பணியை, ஒப்பந்த நிறுவனம் தொடங்கியது. அப்போது குடிநீர் வடிகால் வாரிய சேலம் மேற்பார்வை பொறியாளர் ரமேஷ்பாபு பார்வையிட்டு, பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி, விரைவாக முடிக்க அறிவுறுத்தினார். இப்பணி தொடர்ந்து, 3 நாட்கள் நடக்கும் என்பதால், அதுவரை காடையாம்பட்டி கூட்டுக்
குடிநீர் திட்டத்தில் வினியோகம் பாதிக்கும். இதுகுறித்து ஏற்கனவே காடையாம்பட்டி, ஓமலுார் தாலுகா, ஊராட்சி அலுவலகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.