/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஸ்டாலின் திருமணத்துக்கு வந்த காமராஜர்
/
ஸ்டாலின் திருமணத்துக்கு வந்த காமராஜர்
ADDED : ஜன 21, 2024 12:00 PM
அகில இந்திய அளவில் அவசர நிலை பிரகடனம் அமலாகி இருந்த காலகட்டத்தில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தில், ஸ்டாலின் - துர்கா திருமணம் நடந்தது.
1975 ஆக., 20ல், சென்னையில் நடந்த இந்த விழாவுக்கு காமராஜர் வந்தார். உடல்நலம் சற்றே பாதிக்கப்பட்டிருந்த அவர், திருமணத்தில் பங்கேற்க, மேடை வரை கார் வரும்படி வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. 'திருமணம் நடத்திக்கொள்ளும் மணமக்களுக்கு ஆசி கூறவும், வாழ்த்தவும் வந்திருக்கிற பெரிேயார்களில் நானும் ஒருவன். மணமக்கள் நீண்ட நாள் வாழவும் சகல பாக்கியங்களுடன் வாழவும் ஆசி கூறுகிறேன்' என வாழ்த்தி சென்றார். இதில் அகில இந்திய தலைவர்களாக விளங்கிய, வி.வி.கிரி, நீலம் சஞ்சீவரெட்டி, ஜெகஜீவன்ராம், கே.கே.ஷா என, நாடு முழுதும் இருந்து தலைவர்கள் பங்கேற்றனர்.

