/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முட்புதரில் உயிருடன் சிசு மருத்துவ குழு விசாரணை
/
முட்புதரில் உயிருடன் சிசு மருத்துவ குழு விசாரணை
ADDED : ஜன 19, 2024 02:08 AM
ஆத்துார்:சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே ராமநாயக்கன்பாளையத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசு, நேற்று முன்தினம் மாலை, அங்குள்ள முட்புதரில் உயிருடன் கிடந்தது.
இதை அறிந்து, ஆத்துார் ஆர்.டி.ஓ., ரமேஷ், தாசில்தார் வெங்கடேசன் வந்து, சிசுவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். நேற்று, சேலம் மருத்துவ குழுவினர், ஆத்துார் ஊரக போலீசார், ராமநாயக்கன்பாளையம் கிராமத்தில் விசாரித்தனர்.
இதுகுறித்து மருத்துவ குழுவினர் கூறுகையில், 'தகாத உறவில் அல்லது திருமணம் செய்யாத பெண், குழந்தையை பெற்றிருக்கலாம். சிசுவை உரிய நேரத்தில் மீட்டதால் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வீசியவர் குறித்து விசாரிக்கப்படுகிறது' என்றனர்.

