/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கான்கிரீட் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கிவைப்பு
/
கான்கிரீட் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கிவைப்பு
ADDED : ஜூன் 26, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி,
சங்ககிரி, கோனேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி கோனேரிப்பட்டியில் கான்கிரீட் சாலை அமைக்க, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 13 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று, பூமி பூஜை நடந்தது.
அதில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, சங்ககிரி தொகுதி, எம்.எல்.ஏ., சுந்தரராஜன், பணியை தொடங்கி வைத்தார். அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்ட ஓட்டுனர் அணி செயலர் சிவகுமாரன், ஊராட்சி முன்னாள் தலைவர் ஆனந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.