/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மொபைல், பேட்டரி கைதியிடம் பறிமுதல்
/
மொபைல், பேட்டரி கைதியிடம் பறிமுதல்
ADDED : செப் 25, 2025 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் :சேலம் மத்திய சிறை, முதலாவது பிளாக்கில் உள்ள பொது சுகாதார வளாகம் அருகே, ஒரு கைதி, மண்ணில் புதைத்து வைத்திருந்த மொபைல் போன், பேட்டரியை நேற்று எடுத்தார்.
அதை பார்த்த சிறை வார்டன், மொபைல், பேட்டரியை பறிமுதல் செய்து சிறை அதிகாரியிடம் ஒப்படைத்தார்.
தொடர்ந்து விசாரித்ததில், கைதி கவுதம் என தெரிந்தது. அவருக்கு மொபைல் எப்படி கிடைத்தது என, விசாரணை நடக்கிறது. மேலும் அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.