/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'எம்.ஜி.ஆர்., குறித்து பேச எம்.பி., ராஜாவுக்கு தகுதி இல்லை'
/
'எம்.ஜி.ஆர்., குறித்து பேச எம்.பி., ராஜாவுக்கு தகுதி இல்லை'
'எம்.ஜி.ஆர்., குறித்து பேச எம்.பி., ராஜாவுக்கு தகுதி இல்லை'
'எம்.ஜி.ஆர்., குறித்து பேச எம்.பி., ராஜாவுக்கு தகுதி இல்லை'
ADDED : பிப் 02, 2024 09:55 AM
ஆத்துார்: ''எம்.ஜி.ஆர்., குறித்து பேச, நீலகிரி எம்.பி., ராஜாவுக்கு எந்த தகுதியும் இல்லை,'' என, அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணை செயலர் விந்தியா பேசினார்.
அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்டம் சார்பில், ஆத்துார் நகராட்சி அலுவலகம் எதிரே, தி.மு.க.,வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அதில் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்து பேசுகையில், ''நீட் தேர்வு விலக்கு பெறுவதாக கையெழுத்து பெற்ற படிவங்களை, தி.மு.க., இளைஞர் அணி மாநாட்டில் குப்பையில் வீசிச்சென்றனர். முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்சில் திறந்து வைத்த, கெங்கவல்லி புது மின் பகிர்மான கோட்ட அலுவலகம் எங்குள்ளது என, கலெக்டருக்கே தெரியவில்லை. தலைவாசல் கால்நடை பூங்கா பணியை கிடப்பில் போட்டுள்ளனர்,'' என்றார்.
தொடர்ந்து கொள்கை பரப்பு துணை செயலரான, நடிகை விந்தியா பேசியதாவது:
எம்.ஜி.ஆர்., குறித்து பேச, நீலகிரி எம்.பி., ராஜாவுக்கு எந்த தகுதியும் இல்லை. அவர் இல்லையெனில், கருணாநிதி, தி.மு.க., தலைவராக கூட வந்திருக்க முடியாது. செயல்படாத, 'செல்' ஆக, முதல்வரின் தனி பிரிவு உள்ளது. மக்கள், பத்திரிகையாளர்களுக்கு, தி.மு.க., ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. பட்டியல் இன மாணவியை கொடுமை செய்த தி.மு.க., - எம்.எல்.ஏ., மகன், மருமகள் மீது கண்துடைப்பு நடவடிக்கை தான் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
எம்.பி., சந்திரசேகரன், எம்.எல்.ஏ.,க்களான, ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி, ஏற்காடு சித்ரா, ஓமலுார் மணி, சங்ககிரி சுந்தரராஜன், வீரபாண்டி ராஜமுத்து, ஆத்துார் நகர செயலர் மோகன், மாவட்ட, ஒன்றிய, நகர செயலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
'பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்'
சேலத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாஜலம் தலைமை வகித்தார். அதில் முன்னாள் அமைச்சர் செம்மலை பேசியதாவது:
வேலியே பயிரை மேய்ந்தது என ஒரு பழமொழி உள்ளது. இது, தி.மு.க.,வுக்கு தான் பொருந்தும். எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன், மருமகள் சேர்ந்து, பட்டியலின பெண்ணை கொடுமைப்படுத்தியுள்ளனர். 'பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்பதுபோல் தான் தி.மு.க., ஆட்சி உள்ளது. பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு, வரும் தேர்தலில் ஓட்டுகள் விழாது. வரும் தேர்தல்களில், தி.மு.க.,வின் பொய் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்து விட வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
சேலம் தெற்கு தொகுதி, எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன், முன்னாள் எம்.பி., பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், சக்திவேல், ரவிச்சந்திரன், பொருளாளர் வெங்கடாஜலம், பகுதி செயலர்கள், கிளை செயலர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் பங்கேற்றனர்.

