sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லும் பட்ஜெட் குறித்து மக்கள், வியாபாரிகள் கருத்து

/

நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லும் பட்ஜெட் குறித்து மக்கள், வியாபாரிகள் கருத்து

நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லும் பட்ஜெட் குறித்து மக்கள், வியாபாரிகள் கருத்து

நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லும் பட்ஜெட் குறித்து மக்கள், வியாபாரிகள் கருத்து


ADDED : பிப் 02, 2024 09:53 AM

Google News

ADDED : பிப் 02, 2024 09:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பார்லிமென்ட்டில் நேற்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில், 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும்; நாடு முழுதும் கூடுதலாக மருத்துவ கல்லுாரிகள் அமைப்பது தொடர்பாக குழு அமைக்கப்படும்; கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்; வருமான வரி விதிப்பு விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதுகுறித்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த வணிகர்கள், மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விபரம்:

சேலம் மாநகர தாவர எண்ணெய் உற்பத்தியாளர், வணிகர் சங்கத்தலைவர் சந்திரதாசன்: மத்திய அரசின் கடந்த ஆண்டின் பட்ஜெட்டை விட, தற்போதைய பட்ஜெட்டில் புது வரி விதிப்புகள் இல்லாதது வரவேற்கத்தக்கது. மாநில அரசுகளுக்கு பிரித்து கொடுக்கும் நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறையில் நிலுவையில் உள்ள தொகைகளை, 2010க்கு பின் குறிப்பிட்ட தொகைகள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளது மகிழ்ச்சி.

சேலம் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தலைவர் சியாமளநாதன்: இடைக்கால பட்ஜெட் வரும் லோக்சபா தேர்தலை முன்னிறுத்தியே அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தனி நபர் வருமான வரம்பை அதிகரிக்காதது, சூரிய ஒளி மின்சக்தி தயாரிப்பு, வியாபாரிகளுக்கு மானியம் வழங்காதது, வங்கிகளின் வட்டி விகிதம் குறைக்காதது, வியாபாரிகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலர் பிரபாகரன்: வளர்ச்சி திட்டங்களுக்கு உண்டான பட்ஜெட். வீடுகளில் சூரிய மின்சார மேற்கூரைகளை பயன்படுத்துவோருக்கு, 300 யுனிட் மின்சார சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்படி ஆன்மிக சுற்றுலாவுக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வர உள்ளது வரவேற்கத்தக்கது. சாதாரண ரயில் பெட்டிகள், 'வந்தே பாரத்' பெட்டிகளாக மாற்றப்படும் அறிவிப்பு நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு

செல்லும்.

அரிசிபாளையம் ஓவிய ஆசிரியர் ேஹமலதா: நடுத்தர மக்கள் பயன்பெறும்படி அறிவிப்பு வழங்கி இருப்பது அருமை. பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்படும் என்பது

வரவேற்கத்தக்கது.

சுயதொழில் புரியும் கலைக்குமார்: பயிர் கடன் குறித்த சலுகைகள், புது தொழில் முனைவோருக்குரிய திட்டம் குறித்த அறிவிப்பு இல்லாதது வருத்தம் அளிக்கிறது. நாடு முழுதும் மருத்துவ கல்லுாரிகளை கட்ட குழு அமைக்க இருப்பது வரவேற்கத்தக்கது. அன்னிய முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது

பாராட்டுக்குரியது.






      Dinamalar
      Follow us