/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
8.15 லட்சம் லி., பால் கொள்முதலுக்கு வாய்ப்பு'
/
8.15 லட்சம் லி., பால் கொள்முதலுக்கு வாய்ப்பு'
ADDED : ஜூன் 15, 2025 02:14 AM
'
சேலம், சேலம், தளவாய்பட்டியில் உள்ள ஆவின் பால் பண்ணையில், 52.80 கோடி ரூபாய் மதிப்பில், 7 லட்சம் லிட்டர் பாலை, தானியங்கி முறையில் பதப்படுத்தும் பிரிவை, கடந்த, 12ல், முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதன் செயல்பாடு குறித்து, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: ஆவின் பால் பண்ணைக்கு தினமும் சராசரியாக, 6.35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பாலை பதப்படுத்தி நுகர்வோருக்கு, பால், உப பொருட்கள் தயாரித்து வழங்கப்படுகின்றன. இதை விரைவாக செய்ய, பாலை தானியங்கி முறையில் பதப்படுத்தும் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த, 5 ஆண்டில் தினமும் சராசரியாக, 8.15 லட்சம் லிட்டர் பால் கொள்முதல், 3.60 லட்சம் லிட்டர் பால் விற்பனை என்ற அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சொசைட்டி அலுவலர்களுக்கு, 1.18 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விடுதியையும் பார்வையிட்டார். கலெக்டர் பிருந்தாதேவி, ஆவின் பொது மேலாளர் குமரேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.