/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அம்மாபேட்டை சங்கத்தில் முறைகேடு விசாரணை அதிகாரி நியமித்து உத்தரவு
/
அம்மாபேட்டை சங்கத்தில் முறைகேடு விசாரணை அதிகாரி நியமித்து உத்தரவு
அம்மாபேட்டை சங்கத்தில் முறைகேடு விசாரணை அதிகாரி நியமித்து உத்தரவு
அம்மாபேட்டை சங்கத்தில் முறைகேடு விசாரணை அதிகாரி நியமித்து உத்தரவு
ADDED : ஜன 24, 2024 12:11 PM
சேலம் : சேலம், அம்மாபேட்டை நகர கூட்டுறவு கடன் சங்க 'ஏ' வகுப்பு உறுப்பினர் தயாளன், 70.
இவர் சென்னையில், தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். அதில், மகாசபை கூட்டம் பெயரில் சங்கத்தில் பல லட்சம் முறைகேடு நடந்துள்ளது. தணிக்கையில் சுட்டிக்காட்டிய பல குளறுபடிகள், 10 ஆண்டுக்கு மேலாகியும், நிவர்த்தி செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளனர். குறிப்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும், வருமான வரித்துறையில் இருந்து, சங்கத்துக்கு சேர வேண்டிய, 1.5 கோடி ரூபாயை திரும்ப பெறாமல், மூன்றாண்டாக அலட்சியம் காட்டி சங்கத்துக்கு நிதியிழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது போன்று, பல முறைகேடுகளை ஆதாரத்துடன் குறிப்பிட்டிருந்தார்.இது தொடர்பாக, விசாரணை நடத்தி மேல் நடவடிக்கை எடுக்க, சேலம் மண்டல இணைப்பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, இணைப்பதிவாளர் ரவிக்குமார் பரிந்துரையின்படி, சரக துணைப்பதிவாளர் முத்துவிஜயா, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அதில், புகார் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, அதன் அறிக்கையை தாக்கல் செய்யும்படி அயோத்தியாப்பட்டணம் கள அலுவலர் கவிதாவுக்கு உத்தரவிட்டுள்ளார். முதல்கட்டமாக பூர்வாங்க விசாரணையும், அதன் அடிப்படையில், கூட்டுறவு குற்றமுறை மேல் விசாரணையும் தொடரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

