/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இறந்த இரு வாலிபர்களின் உடல் உறுப்புகள் தானம்
/
இறந்த இரு வாலிபர்களின் உடல் உறுப்புகள் தானம்
ADDED : ஜன 24, 2024 12:12 PM
சேலம் : இறந்த இரு வாலிபர்களின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே கோவில் வெள்ளார் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கிருஷ்ணன் மகன் நாகராஜ், 19.
பத்தாம் வகுப்பு படித்த இவர், ஓசூரில் தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தார். பொங்கல் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தவர் கடந்த, 19ல், ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் வேலைக்கு புறப்பட்டார். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மதியம், 12:30 மணிக்கு சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. விபத்தில் படுகாயமடைந்தவர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். அவரது குடும்பத்தார் ஒப்புதலுடன், நாகராஜின் இரு கண்கள் தானமாக பெறப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கும், தோல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.*நாமக்கல் மாவட்டம், மோளப்பாளையத்தை சேர்ந்த வெங்கடாசலம்-நித்யா தம்பதியின் மகன் பிரதீப்குமார், 23; டிராக்டர் டிரைவர். இவர் கடந்த, 15 இரவு, 11:30 மணியளவில் ேஹாண்டா பைக்கில் வேலகவுண்டம்பட்டி பைபாசில் சென்றபோது, சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானார். தலையில் பலத்த அடிபட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 21 இரவில் மூளைச்சாவு அடைந்துள்ளார். அவரது குடும்பத்தார், வாலிபரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். வாலிபரின் கல்லீரல், ஒரு ஜோடி சிறுநீரகம், தோல் ஆகியன தானமாக பெறப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கும், ஒரு ஜோடி கண்கள், சேலம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

