/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குடிநீர் கட்டணம் செலுத்த இறுதி நாள் கணினி பிரச்னையால் மக்கள் அவதி
/
குடிநீர் கட்டணம் செலுத்த இறுதி நாள் கணினி பிரச்னையால் மக்கள் அவதி
குடிநீர் கட்டணம் செலுத்த இறுதி நாள் கணினி பிரச்னையால் மக்கள் அவதி
குடிநீர் கட்டணம் செலுத்த இறுதி நாள் கணினி பிரச்னையால் மக்கள் அவதி
ADDED : ஜன 21, 2024 12:09 PM
மேட்டூர்; மேட்டூர் நகராட்சியில் குடியிருப்பு, வணிக நிறுவனங்கள், விடுதிகள் என, 9,000 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நகராட்சி சார்பில் தினமும், 74.50 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. வீட்டு இணைப்புகளுக்கு, 3 மாதங்களுக்கு ஒருமுறை குறைந்தபட்சம், 255 ரூபாய் குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையான கட்டணம் செலுத்த நேற்று இறுதி நாள். அதனால் நகராட்சி அலுவலகத்தில் நேற்று வழக்கத்தை விட ஏராளமானோர், கட்டணம் செலுத்த வெகுநேரம் காத்திருந்தனர்.
வழக்கமாக பொங்கல் விடுமுறை காலங்களில் குடிநீர் கட்டணம் செலுத்தும் காலக்கெடு ஓரிரு நாட்கள் நீடிக்கப்படும். நடப்பாண்டு நீட்டிக்கப்படாதது, மக்களை அதிருப்தி அடையச்செய்தது.
மேலும் குடிநீர் கட்டணம் பதிவு செய்யும் நகராட்சி அலுவலக கணினியும், 'சர்வர்' பிரச்னையால் மெதுவாக இயங்கியது. இதனால் ஏராளமான மக்கள், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், 'இறுதி நாளில் நகராட்சி அலுவலகத்துக்கு வந்து தான் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது இல்லை. இன்னும் சில நாட்கள் வெளியிடங்களில் உள்ள ஆன்லைன் மையங்களிலும் குடிநீர் கட்டணம் செலுத்தலாம். கெடு முடிந்தபோதும், அதற்கென தனியே அபராதம் விதிக்கப்படாது' என்றனர்.

