/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பீரோ உடைத்து செயின் திருட்டு 4 மாதத்துக்கு பின் போலீஸ் வழக்கு
/
பீரோ உடைத்து செயின் திருட்டு 4 மாதத்துக்கு பின் போலீஸ் வழக்கு
பீரோ உடைத்து செயின் திருட்டு 4 மாதத்துக்கு பின் போலீஸ் வழக்கு
பீரோ உடைத்து செயின் திருட்டு 4 மாதத்துக்கு பின் போலீஸ் வழக்கு
ADDED : ஜன 24, 2024 09:59 AM
சேலம்: சேலம், மெய்யனுாரில் வீட்டின் பீரோவை உடைத்து தங்க செயின்களை திருடிய மர்ம நபர்கள் குறித்து, நான்கு மாதங்களுக்கு பின் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம், மெய்யனுார் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் கணேஷ், 40. இவர் மனைவி கடந்த ஆக.,25 மதியம், 2:00 மணிக்கு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடல் அரசு மருத்துவமனையின் பிரேத அறைக்கு எடுத்துச் சென்ற நிலையில், அனைவரும் அங்கு சென்றனர்.
அந்த நேரத்தில், மர்ம நபர்கள் வீட்டின் பீரோவை உடைத்து அதிலிருந்த, 1 பவுன் தங்க தாலி, 1 பவுன் செயின் ஆகியவற்றை எடுத்து சென்றுள்ளனர். பள்ளப்பட்டி போலீசில். அன்றைய தினமே சங்கர் கணேஷ் புகார் அளித்தும் வழக்குப்பதிவு செய்யவில்லை. இது குறித்து, உயரதிகாரிகளிடம் சங்கர் கணேஷ் புகாரளித்ததையடுத்து, நான்கு மாதங்களுக்கு பின் நேற்று முன்தினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.