/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நா.தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை தி.மு.க.,வுக்கு எதிராக போராட்டம்
/
நா.தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை தி.மு.க.,வுக்கு எதிராக போராட்டம்
நா.தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை தி.மு.க.,வுக்கு எதிராக போராட்டம்
நா.தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை தி.மு.க.,வுக்கு எதிராக போராட்டம்
ADDED : ஜன 24, 2024 10:00 AM
சேலம்: நாம் தமிழர் கட்சியின், கன்னியாகுமரி மாவட்ட தக்கலை ஒன்றிய தலைவர் சேவியர்குமார், சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில் மாநகர், மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசபாண்டியன் தலைமை வகித்து பேசுகையில்,'' கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் இருந்து, எம்.சாண்ட் மணலை வெட்டி எடுத்து கேரளாவுக்கு கடத்துவதை, போராட்டம் நடத்தி தடுத்தது நாம் தமிழர் கட்சி. அதேபோல, சொந்த பணத்தில் ஆறு, குளங்களை துார்வாரி உள்ளனர். மருத்துவம், கோழி கழிவுகளை பணம் வாங்கி கொண்டு அனுமதித்த, தி.மு.க.,வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி தடுத்து நிறுத்தியதால் சேவியர்குமார் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதற்கு காரணமான, தி.மு.க., ஒன்றிய செயலர் ரமேஷ்பாபு, இன்னும் கைது செய்யப்படவில்லை. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகம் முழுவதும் போலீஸ் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என்றார்.