/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆக்கிரமிப்பு வீடு வருவாய்த்துறை அகற்றம்
/
ஆக்கிரமிப்பு வீடு வருவாய்த்துறை அகற்றம்
ADDED : ஜூன் 24, 2025 01:16 AM
ஓமலுார், காடையாம்பட்டி தாலுகா, கொங்குப்பட்டி வடக்கு கிராமத்தில், கல்லாங்குத்து என வகைப்பாடு செய்யப்பட்ட அரசு நிலத்தில், ராஜா என்பவர் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுவதாகவும், இதனால், அங்குள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு செல்லக்கூடிய பாதை தடுக்கப்படுவதாகவும், காடையாம்பட்டி தாசில்தார் அலுவலகத்துக்கு புகார் சென்றது.
இது குறித்து ஆக்கிரமிப்புதாரருக்கு அகற்ற அறிவுறுத்தினர். ஆனால் அகற்றப்படாததால், நேற்று, செம்மாண்டப்பட்ட ஆர்.ஐ.,பாலாஜி மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் அம்பேத்கர்மாது, மாரி, கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலையில், ஆக்கிரமிப்பு கட்டடம் பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டது. தீவட்டிப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.