ADDED : ஜன 21, 2024 12:01 PM
கடந்த, 1972 ஏப்., 8, 9ல் காஞ்சிபுரத்தில், தி.மு.க., மாநாடு நடந்தது. அப்போதைய தலைவர் கருணாநிதி, பொதுச்செயலர் நெடுஞ்செழியன், பொருளாளர்
எம்.ஜி.ஆர்., பங்கேற்ற நிலையில், மிகப்பெரிய ஊர்வலம் நடந்தது. அண்ணாதுரை பிறந்த ஊரில் நடக்கும் மாநாட்டில், தன் பங்கு இருக்க வேண்டும் என விரும்பிய ஸ்டாலின், இளைஞர் தி.மு.க., சார்பில், அண்ணாதுரை பெயரில் சுடரை ஏந்தி, சென்னையில் இருந்து தொடர் ஓட்டமாக கொண்டு சென்று, மாநாட்டு பந்தலில் ஒப்படைக்க முடிவு செய்தார். அதன்படி மாநாட்டு நாளில், சென்னை, அண்ணாதுரை நினைவிடத்தில் இருந்து சுடர் ஓட்டம் புறப்பட்டது. காஞ்சிபுரம் நகர எல்லையிலிருந்து, மாநாட்டு பந்தல் வரை, ஸ்டாலின் சுடரை ஏந்தி ஓடிவந்து, தலைவர், பொதுச்செயலர் கையில் ஒப்படைத்தார். இதுகுறித்த செய்தி, மறுநாள், 'முரசொலி' நாளிதழில் படத்துடன் வெளியானது.
சினிமா வசனகர்த்தா
கருணாநிதி வசனம் எழுதிய முதல் படம் 'ராஜகுமாரி!'. அந்த வாய்ப்பை தந்தவர்,
ஏ.எஸ்.சாமி 1946ல் படவுலகில் நுழைந்த கருணாநிதி மனோகரா, பராசக்தி, பூம்புகார் உள்ளிட்ட பல பிரமாண்ட படங்களுக்கு கூர்மையான வார்த்தை களால் வசனம் தீட்டி படம் பார்த்த வர்களை நெக்குருகச் செய்தார் சமீபகாலம் வரையிலும் அவர் சினிமா கதை வசனம் எழுதி வந்தார். மொத்தம், 50க்கும் மேற்பட்டகளுக்கு படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

