/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' பணி புறக்கணிப்பு வருவாய்த்துறை சங்க கூட்டமைப்பு தர்ணா

ADDED : செப் 26, 2025 02:03 AM
ஓமலுார், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டப்பணிகளை புறக்கணித்து, ஓமலுார் தாசில்தார் ரவிக்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர், ஓமலுார் தாலுகா அலுவலகம் முன் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை சங்க கூட்டமைப்பு சார்பில், மதியம், 3:00 முதல், இரவு, 8:00 மணி வரை, பணிகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் காலி பணியிடங்களை நிரப்புதல்; 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்களை விசாரிக்க உரிய அவகாசம் வழங்குதல்; வருவாய், பேரிடர் மேலாண், நில அளவை துறைகளில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர், உடைமைகளை காக்க, சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றுதல் உள்பட, 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் முன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் குமார் தலைமையில் வருவாய் சங்க கூட்டமைப்பினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
சங்ககிரி தாசில்தார் அலுவலகம் முன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சேலம் மாவட்ட துணைத்தலைவர் சிவராஜ் தலைமையில் போராட்டம் நடந்தது.
அதேபோல் ஆத்துார், கெங்கவல்லி, தலைவாசல் தாலுகா அலுவலகங்கள் முன், வருவாய்த்துறையினர், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.