/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காடையாம்பட்டி குழாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்
/
காடையாம்பட்டி குழாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்
காடையாம்பட்டி குழாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்
காடையாம்பட்டி குழாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்
ADDED : ஜன 23, 2024 10:00 AM
மேட்டூர்: மேட்டூர் அனல்மின் நிலையம் பாலத்தில், காடையம்பட்டி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் ஆறாக ஓடியது.
மேட்டூர், தொட்டில்பட்டியில், காடையாம்பட்டி அதன் சுற்றுப்பகுதிக்கு காவிரியாற்றில் தண்ணீர் எடுத்து தினமும், 2.2 கோடி லிட்டர் குடிநீர் குழாய் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று காலை, 11:45 மணியளவில் மேட்டூர் அனல்மின் நிலையம் அருகிலுள்ள, பாலத்தின் வழியாக செல்லும் காடையாம்பட்டி குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் பீறிட்டு வெளியேறி சாலையில் ஆறாக ஓடியது.
உடனடியாக, வடிகால் வாரிய அலுவலர்கள் குடிநீர் வினியோகத்தை நிறுத்தினர். எனினும், ஏற்கனவே சென்று கொண்டிருந்த குடிநீர் பின்னோக்கி வந்து உடைப்பு வழியாக வெளியேறி வீணானது. பின்னர், பழமையான குடிநீர் குழாயை வெல்டிங் மூலம் பொருத்தும் பணி நேற்று இரவு, 8:00 மணி வரை நடந்தது. பணிகள் முடிந்த பின்பு மீண்டும் குடிநீர் வினியோகம் துவங்கியது.
குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் நேற்று, 8 மணி நேரம் குடிநீர் வினியோகம் பாதித்தது. தற்போது காணப்படும் இரும்பு குழாய்கள் அமைத்து, 23 ஆண்டுகள் ஆனதால் பலவீனமாகி விட்டது.
விரைவில் புதிய குழாய்கள் அமைக்கும் பணி துவங்கும் என, குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர்.

