/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெள்ளை கற்கள் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்
/
வெள்ளை கற்கள் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : ஜூன் 15, 2025 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி, சேலம் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் இளங்கோவன் உள்ளிட்ட துறையினர், தேவூரில் நேற்று, ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவூர் - சங்ககிரி சாலை, ரெட்டிப்பாளையத்தில், வெள்ளை கற்களுடன் வந்த டிப்பர் லாரியை நிறுத்தும்படி, 'சைகை' காட்டினர்.
உடனே டிரைவர், சற்று முன்னதாக லாரியை நிறுத்தி, இறங்கி தப்பி ஓடிவிட்டார். கற்களுடன் லாரியை பறிமுதல் செய்த இளங்கோவன், தேவூர் போலீசில் ஒப்படைத்தார். தொடர்ந்து அவர் புகார்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.