/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேளாண் அறிவியல் நிலையத்தில் மரம் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி
/
வேளாண் அறிவியல் நிலையத்தில் மரம் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி
வேளாண் அறிவியல் நிலையத்தில் மரம் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி
வேளாண் அறிவியல் நிலையத்தில் மரம் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி
ADDED : செப் 11, 2025 01:07 AM
பனமரத்துப்பட்டி, சேலம், சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையம், கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்க நிறுவனம் இணைந்து நடத்திய மரம் வளர்ப்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி, கருத்தரங்கு, அறிவியல் நிலையத்தில் நேற்று நடந்தது.
அதில் தலைமை வன பாதுகாவலர் மற்றும் விரிவாக்க துறை தலைவர் கணேஷ்குமார், பயிற்சியை தொடங்கி வைத்து வேளாண் காடுகள் குறித்து பேசினார். முனைவர் புவனேஸ்வரன், முக்கிய தடி மரங்களான தேக்கு சாகுபடி தொழில்நுட்பம், வாழை சாகுபடியில் காற்று தடுப்பானாக பயன்படும் சவுக்கு மரம் பற்றியும், முனைவர் சுப்ரமணியன், மகாகனி மற்றும் குமிழ் மர உயர் சாகுபடி தொழில்நுட்பம் குறித்தும் விளக்கினர்.
முனைவர் கார்த்திகேயன், மரப்பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல், அதை கட்டுப்படுத்தும் முறை குறித்து விளக்கினார். ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் சந்திரசேகரன், மரம் வளர்க்கும் விவசாயிகளுக்கு உதவும் செயலி குறித்து செயல்விளக்கம் அளித்தார். நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள், ஏற்காடு, கருமந்துறை, ஆத்துார், சந்தியூர் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் பங்கேற்றனர்.