/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பட்டா மாறுதலுக்கு விவசாயியிடம் ரூ.2,000 லஞ்சம்; வி.ஏ.ஓ., கைது
/
பட்டா மாறுதலுக்கு விவசாயியிடம் ரூ.2,000 லஞ்சம்; வி.ஏ.ஓ., கைது
பட்டா மாறுதலுக்கு விவசாயியிடம் ரூ.2,000 லஞ்சம்; வி.ஏ.ஓ., கைது
பட்டா மாறுதலுக்கு விவசாயியிடம் ரூ.2,000 லஞ்சம்; வி.ஏ.ஓ., கைது
ADDED : ஜூன் 22, 2025 01:35 AM
பாலக்கோடு, பாலக்கோடு அருகே, விவசாய நிலத்திற்கு பட்டா மாறுதலுக்கு, 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் பிரபு, 40. இவர், பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி நகரில், வி.ஏ.ஓ.,வாக பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் தன் விவசாய நிலத்திற்கு பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
பட்டா மாறுதலுக்கு, 5,000 ரூபாய் பிரபு லஞ்சம் கேட்டுள்ளார். கணேசனும், 3,000 ரூபாய் கொடுத்தார். ஆனால், மீதத்தொகை, 2,000 ரூபாய் கொடுத்தால் தான், பட்டா மாற்றம் செய்ய முடியும் என, பிரபு கூறினார். பணம் தர விரும்பம் இல்லாத கணேசன், இது குறித்து தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார், ரசாயனம் தடவி, 2,000 ரூபாயை கணேசனிடம் கொடுத்து அனுப்பினர்.
பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் இருந்த, வி.ஏ.ஓ., பிரபுவிடம், நேற்று மதியம், 12 மணிக்கு, அப்பணத்தை கணேசன் கொடுத்துள்ளார். இதை பிரபு வாங்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., நாகராஜன், இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் வி.ஏ.ஓ., பிரபுவை கைது செய்தனர்.
பணியின் போது, மது போதையில் இருந்ததால் கடந்த, 6 மாதத்திற்கு முன், 'சஸ்பெண்ட்' ஆகி மீண்டும் பணியில் சேர்ந்த நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால், வி.ஏ.ஓ., பிரபு கைதாகி உள்ளார். கடந்த, 2 மாதத்தில் பாலக்கோடு பகுதியில், 3 அரசு ஊழியர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாரால், கைதாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.