/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
2 குழந்தைகளின் தாய் பலி ஆட்டிறைச்சி சாப்பிட்டது காரணம்?
/
2 குழந்தைகளின் தாய் பலி ஆட்டிறைச்சி சாப்பிட்டது காரணம்?
2 குழந்தைகளின் தாய் பலி ஆட்டிறைச்சி சாப்பிட்டது காரணம்?
2 குழந்தைகளின் தாய் பலி ஆட்டிறைச்சி சாப்பிட்டது காரணம்?
ADDED : அக் 15, 2025 12:28 AM
சேலம்;இரவில் ஆட்டிறைச்சி சாப்பிட்டு துாங்கிய இரு குழந்தைகளின் தாய் காலை மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம், சின்ன திருப்பதி, காந்தி நகரைச் சேர்ந்த மோகன் மனைவி நந்தினி, 26. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன், மோகன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். மாமனார், மாமியார், குழந்தைகளுடன் நந்தினி வசித்தார். கூலி வேலைக்கு சென்று வந்தார்.
நேற்று காலை, 8:00 மணி வரை அவர் எழவில்லை. மாமியார் பழனியம்மாள், அவரது அறைக்கு சென்று பார்த்தபோது, அசைவின்றி இருந்தார். உடனே சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதனையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிந்தது. கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசார் கூறுகையில், 'நந்தினி இரவு ஆட்டுக்கறி சாப்பிட்டுள்ளார். இரவில் கறி சாப்பிட்டதால் இறந்தாரா அல்லது மாரடைப்பா என, பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் தெரியவரும்' என்றனர்.