/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாழப்பாடி அருகே பெண் எரித்துக் கொலை;வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை
/
வாழப்பாடி அருகே பெண் எரித்துக் கொலை;வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை
வாழப்பாடி அருகே பெண் எரித்துக் கொலை;வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை
வாழப்பாடி அருகே பெண் எரித்துக் கொலை;வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை
ADDED : பிப் 02, 2024 11:39 PM

வாழப்பாடி:வாழப்பாடி அருகே பெண் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். வாலிபரை கைது செய்து, கொலை காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த மலையாளப்பட்டி அருகே வல்லரசு வீட்டின் எதிரே, இன்று மதியம் 12 மணியளவில், அடையாளம் தெரியாத பெண் பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,வாழப்பாடி அடுத்த மலையாளப்பட்டி விஏஓ., அருள்,35. புகாரின் பேரில், வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து இன்று இரவு 9.30 மணி அளவில் கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்:
மலையாளப்பட்டி பகுதியில் வல்லரசு என்பவர், அவருடன் தங்கி இருந்த பெண்ணை கொலை செய்துள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்றபோது, வல்லரசு, ஒரு பெண் உடலை எரித்துக் கொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் வல்லரசு தப்பி ஓடினார். இதன்பின்னர், தீயையணைத்து தடைகளை கைப்பற்றி பார்த்தபோது, மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த சுகுணா,33. என்பதும், இவர் இவருடன் தகாத உறவு ஏற்பட்டு தனியாக வசித்து வந்ததும் தெரிந்தது.
நாகப்பட்டினம் அருகே மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த சுகுணா, 33. இவருக்கு ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணமாகி, 3 குழந்தை உள்ள நிலையில், கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 3 வருடங்களாக, கணவரை விட்டு பிரிந்து சுகுணா தனியாக வசித்து வருகிறார்.
இதையடுத்து, கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பருடன் செல்போன் மூலம் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, சுகுணா மலையாளப்பட்டி பகுதிக்கு அரளிப்பூ பறிக்க வேலைக்கு செல்வதாக தெரிவித்துவிட்டு, வல்லரசு சமீபத்தில் மலையாளப்பட்டி பகுதியில் வாங்கிய காட்டில் இருவரும் தனியாக தங்கி வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று வல்லரசுக்கும், சுகுணாவுக்கும் தகராறு ஏற்பட்டு கத்தியால் சுகுணாவை அறுத்துக் கொன்றுள்ளார். இதன்பின்னர் சுகுணா உடலை வீட்டில் வைத்துவிட்டு, கொல்லிமலைக்கு சென்றுள்ளார். வல்லரசு வீட்டிற்கு வந்த, வல்லரசு தாயார் ரத்தம் கொட்டி கிடப்பதையும், மகனுடன் வசித்து வந்த சுகுணா என்ற பெண் இல்லாததையும் பார்த்து சந்தேகமடைந்து அக்கம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து தகவலின் பேரில் அப்பகுதிக்கு போலீசார் இன்று சென்றபோது, சுகுணாவை தீ வைத்து எரித்துக் கொண்டிருந்த வல்லரசு தப்பி ஓடினார். இதையடுத்து வல்லரசை மடக்கிப்பிடித்து, கொலை காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. வல்லரசு, சுகுணாவை அறுத்த கத்தி மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றனர்.

