/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இளைஞரணி மாநாடு: குடும்பமாக வந்து 'போட்டோ' எடுக்கும் மக்கள்
/
இளைஞரணி மாநாடு: குடும்பமாக வந்து 'போட்டோ' எடுக்கும் மக்கள்
இளைஞரணி மாநாடு: குடும்பமாக வந்து 'போட்டோ' எடுக்கும் மக்கள்
இளைஞரணி மாநாடு: குடும்பமாக வந்து 'போட்டோ' எடுக்கும் மக்கள்
ADDED : ஜன 21, 2024 12:11 PM
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில், தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு இன்று நடக்கிறது. இதற்கு பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
பெரிய அளவில் மேடை, உணவு கூடம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு, மாநாட்டு திடலே ஒரு நகரம் போல் மாற்றப்பட்டுள்ளது. அதன் உட்பகுதியில், 2.50 லட்சம் பேர் அமரும்படி நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. முக்கிய பிரமுகர்கள் அமர வசதியாக, 'ஷோபா'க்கள் போடப்பட்டுள்ளன.
மாநாட்டின் முகப்பு பகுதியில், ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி புகைப்
படங்கள் உள்ளன. மாநாட்டு திடலில், 100 அடி உயரத்தில் தி.மு.க., கொடி ஏற்ற கம்பம் நடப்பட்டுள்ளது. மாநாடு திடல் முழுதும் தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டு, இரவை பகலாக்கும்படி மின் விளக்குகள் பொருத்தப்பட்டு ஜொலிக்கின்றன. இந்த பிரமாண்டத்தை கண்டுகளிக்க வேண்டும் என்பதற்காகவே, சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மக்கள் குடும்பமாக வந்து, 'போட்டோ, செல்பி' எடுத்து உற்சாகமாக சென்றனர். மேலும், 5 லட்சம் பேர் திரளும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம் நோக்கி கட்சியினர் வந்தபடியே இருந்தனர். இந்த மாநாட்டையொட்டி போக்குவரத்திலும் நேற்றும், இன்றும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

