/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மதுராபுரி மஞ்சுவிரட்டில் 1௦௦ காளைகள்
/
மதுராபுரி மஞ்சுவிரட்டில் 1௦௦ காளைகள்
ADDED : ஜன 24, 2024 05:29 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே மதுராபுரியில் நடந்த மஞ்சுவிரட்டில் பங்கேற்ற காளைகள் வீரர்களை மலைக்க வைத்தன.
இங்குள்ள உச்சிக்கருப்பர் கோயில் தை படைப்பு திருவிழாவை முன்னிட்டு கோயில் முன்பாக உள்ள வயலில் மஞ்சுவிரட்டு நடந்தது. கோயில் விழாக்குழு சார்பில் ஊர்வலமாக துணி எடுத்து வந்து அனைத்து காளைகளுக்கும் வழங்கினர். முதலில் கோயில் மாடுகளுக்கு வழிபாடு நடத்தப்பட்டு அவிழ்க்கப்பட்டன. அவற்றை மாடுபிடி வீரர்கள் தொட்டு வணங்கிய பிறகு மற்ற காளைகள் அவிழ்க்கப்பட்டது. பல மாடுகள் வீரர்களிடம் பிடிபட்டது. சில காளைகள் பிடிபடாமல் வீரர்களை மலைக்க வைத்து விட்டு திடலைவிட்டு வெளியேறின.100க்கும் மேற்பட்ட காளைகள் மஞ்சுவிரட்டில் பங்கேற்றன.
காயம் பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

