ADDED : செப் 09, 2025 09:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; சிவகங்கை தாலுகா எஸ்.ஐ., சிவபிரகாஷ் போலீசாருடன் கீழக்கோவனுாரில் இருந்து மேலக்கோவானுார் செல்லும் ரோட்டில் குறிஞ்சி கண்மாய் கரையில் ரோந்து சென்றனர்.
அப்போது கோவானுார் அஜய் 21, பிரவீன்குமார் 20, பி.வேலாங்குளம் பிரபாகரன் 23 உள்ளிட்டோர் கண்மாய் கரையில் கஞ்சாவை பொட்டலம் போட்டு கொண்டிருந்தனர். போலீசாரைக் கண்டதும் அவர்கள் ஓடினர்.
அவர்களை போலீசார் பிடித்து கைது செய்து அவர்களிடம் இருந்த ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் ஒரு வாளை பறிமுதல் செய்தனர்.

