ADDED : ஜன 14, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம், : திருப்புவனத்தில் நேற்று ஒரு கிலோ கொடுக்காப்புளி 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒவ்வொரு சீசன் காலங்களிலும் குறிப்பிட்ட பழங்கள், காய்கறிகள் அதிகம் விற்பனையாகும் தை மாதம் கரும்பு, பனங்கிழங்கு ஆகியவற்றுடன் கொடுக்காப்புளியும் அதிகம் விற்பனையாகும்.
வியாபாரி ஹக்கீம் கூறுகையில்: கடந்தாண்டு அதிகபட்சமாக 250 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கொடுக்காப்புளி அதிகம் விளைவிக்கப்படுகிறது. பெங்களுரூ, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் விற்பனைக்கு வரும். தற்போதுதான் சீசன் தொடங்கியுள்ளதால் விலை உயர்ந்துள்ளது. வரத்து அதிகரித்த உடன் விலை குறையத் தொடங்கும், என்றார்.

